search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின் முத்திரை"

    • அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.
    • அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.

    நம்மில் பலரும் சுவாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்.

    அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    இது நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.

    சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை குறிக்கும்.

    ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது.

    (நாம்&ஜீவாத்மா) கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும் இந்த இரண்டு விரல்களின் இணைப்பு அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும்.

    இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.

    • எத்தனை கற்றறிந்தவர்களாக இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் தேவை.
    • குரு பௌர்ணமி அதாவது ஆடிப் பௌர்ணமி தினத்தில் சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வணங்கி, வழிபாடுகள் செய்யப்படுகின்றது.

    உலகிற்கு மெய்யறிவைத் தந்து தத்துவ ஞானத்தைப் போதித்த ஞானகுருவாகச் சிவ பிரான் கொள்ளப்படுகின்றார். சனகர், சனாதனர், சனந்தர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கும் உண்மையை உணர்த்தும் மெய்யறிவைப் போதித்த நன்நூலாக ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் கொள்ளப்படுகின்றது. இத்தினம் குரு பௌர்ணமி என்றும் குரு பூரணை என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

    மாதந்தோறும் வரும் பௌர்ணமித் தினங்கள் இந்துக்களுக்குச் சிறப்புமிகு புண்ணிய தினங்களாகும். வழிபாட்டிற்குரிய விசேட தினங்களாகவும் அமைகின்றன. தை மாத பௌர்ணமி தினம் தைப்பூசமென்றும், மாசி மாத பௌர்ணமி தினம் மாசிமகமென்றும், பங்குனி சித்திரை மாத பௌர்ணமி தினங்கள் முறையே பங்குனி உத்தரம், சித்திரா பௌர்ணமி என்றும், வைகாசி மாத பௌர்ணமி தினம் வைகாசி விசாகம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுவது போன்று ஆடி மாதத்துப் பௌர்ணமி நன்னாள் குரு பௌர்ணமி அல்லது குருபூரணை என்று சிறப்புக்குரிய தினமாக அமைகின்றது.

    ஆதியிலே குறிப்பிட்ட சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞானோபதேசம் வழங்கிய நாளே ஆடி மாதப் பௌர்ணமி நாளாகும். ஞானவடிவினராகக் கைலாச மலையில் கல்லால மரத்தின் நிழலிலே தென்திசை நோக்கி அமர்ந்திருந்த சிவபிரானிடம் மேற்படி முனிவர்கள் நால்வரும் தாம்பல வேதாகமங்களைக் கற்றும் தமக்கு அவற்றிலே மயக்க நிலை இருப்பதாகவும், அவற்றைப் போக்கியருள வேண்டும் என்றும் தொழுது நின்றனர்.

    சிவபிரான் அம்முனிவர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய ஆகமப் பொருள் விளக்கத்தை விளக்கியதுடன் வலக்கையைச் சின் முத்திரையாகப் பிடித்து மார்பிலே வைத்து யோக சமாதியடைந்து ஞானத்தின் தத்துவத்தையும் விளக்கியருளினார்.

    அத்துடன் சின் முத்திரை மூலம் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் இயல்பு நிலைகளையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அறிவூட்டி அருள் செய்தார். தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது. குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்றமும் இதுவாகவே அமைந்துள்ளது.

    குருவின் முக்கியத்துவம் இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. தெளிவுறுத்தப்படுகின்றது. எத்தனை கற்றறிந்தவர்களாக இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் தேவை. தெளிவுறுத்தல்கள் தேவை என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்து அரச குமாரர்களும் குருகுலத்திற்குச் சென்று குருவுக்குப் பணிவிடை செய்து பக்குவப்பட்ட மனநிலையில் தமக்குரிய கல்வியைக் கற்க வேண்டும் என்ற விதியிலிருந்தது.

    சமுதாயத்தில் அன்று அரசர்களுக்கும் மேலாக, மேன்மை கொண்டவர்களாகக் குருவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. இன்று உலகிலே ஆசிரிய தினமென்று ஆண்டிலே ஒருநாள் அண்மைக் காலகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆசிரியரின் அதாவது குருவின் பெருமையை உணர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்துக்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குருவின் பெருமையையும், தேவையையும் மேன்மையையும் போற்றுவதை ஒரு சமயம் சார்ந்த பண்பாக, மரபாக, வழி பாடாகக் கொண்டுள்ளனர். குரு பௌர்ணமி அதாவது ஆடிப் பௌர்ணமி தினத்தில் சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வணங்கி, வழிபாடுகள் செய்யப்படுகின்றது. அதாவது ஆசிரியர் பெருமை போற்ற இது ஒரு வழிபாட்டு நாளாயமைகின்றது.

    சமயக்குரவர்களுக்கும், சந்தான குரவர்களுக்கும், நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் ஏனைய பெரியார்களுக்கும் வழிபாட்டுடன் கொண்டாடப்படும் குரு பூசைகள், இந்துக்களின் வழிகாட்டி நெறிப்படுத்திய ஆசிரியர்களான குருக்களுக்குச் செய்யும் நன்றியுணர்வுடன் கூடிய வழிபாடாகும். குருவை நன்றியுணர்வுடன் போற்றும் பாரம்பரிய இந்துக்களின் ஆசிரிய தினமுமாகும்.

    குரு பௌர்ணமி நன்னாளில் உலகிலே அறநெறிகள் பெருகி அன்பும், பண்பும் கொண்ட மனிதகுலம் உருவாக உறுதியுற குருவாக இருந்து அருள்செய்யும் அருளாளன் எம்பெருமான் சிவபிரானைத் தொழுது அவனது கருணை பெருகி நலம் கொழிக்க வழிபடுவோம்.

    ×